ADDED : ஜன 14, 2024 04:46 AM

* சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியின் நடந்த விழாவில் கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தனர். கல்லுாரி மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்றார். கரகாட்டம், சிலம்பம், உறியடித்தல், கும்மியடித்தல், நாட்டுப்புறப் பாடல்கள், கிராமத்து பெண்களின் அணிவகுப்பு நடந்தது. கல்லுாரி மாணவர் தலைவர் சபானா நன்றி கூறினார்.
*சிவகாசி காக்கி வாடன் பட்டி பொன்னுச்சாமி நாயுடு கல்வியியல் கல்லுாரி, கே.ஆர்.பி., கலை அறிவியல் கல்லுாரியில் கல்லூரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார் .முதல்வர்கள் கண்ணன், ராம் ஜெயந்தி முன்னிலை வகித்தனர். மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
*சிவகாசி ஹயக்ரிவால் சர்வதேச பள்ளியில் தலைவர் வெங்கடேஷ் பிரசாத் துவக்கி வைத்தார் .தலைமை முதல்வர் பாலசுந்தரம், தலைவர் ஜெயக்குமார் முதல்வர் அம்பிகா தேவி பேசினர். மாணவர்களின் வாழ்த்து மடல் தயாரித்தல், பானை அலங்கரித்தல், ரங்கோலி கோலம் போடுதல், பாரம்பரிய விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி துணை முதல்வர்கள் ஞான புஷ்பம், சுதா, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
*சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ் பிரியா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். விஸ்வநாதன் ஆர்.டி.ஓ., மாநகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
*சிவகாசி அரசன் மாடல் பள்ளியில் பள்ளி முதன்மை முதல்வர் சாரா ஜேக்கப், முதல்வர் சிவசங்கரி தலைமை வகித்தனர். மாணவர்கள் பொங்கல் வைத்து கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

