/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியும் வேலைவாய்ப்பும் தரும் காளீஸ்வரி கல்லுாரி
/
கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியும் வேலைவாய்ப்பும் தரும் காளீஸ்வரி கல்லுாரி
கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியும் வேலைவாய்ப்பும் தரும் காளீஸ்வரி கல்லுாரி
கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியும் வேலைவாய்ப்பும் தரும் காளீஸ்வரி கல்லுாரி
ADDED : ஜூன் 25, 2025 01:40 AM

ஏ.பி.செல்வராஜன்,
கல்லுாரி செயலர்,
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி
17 இளநிலை, 9 முதுநிலை பட்டப்படிப்புகள், 147 ஆசிரியர்கள் உடன் மதுரை காமராஜர் பல்கலை இணைவு பெற்ற கல்லுாரிகளில் இளநிலை உயிரி தொழில்நுட்பவியல், உயிரி தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி படிப்பு, உணவகம், உணவக மேலாண்மை போன்ற படிப்புகளை முதல் முதலாக அறிமுகப்படுத்திய கல்லுாரி என்ற பெருமை சிவகாசி காளீஸ்வரி கல்லுாரிக்கு உண்டு.
தேசிய தர மதிப்பீட்டு குழுவின் மூலம் 4வது தகுதி பெற்றுள்ளது. தர மேலாண்மை அமைப்புகளில் சிறந்து விளங்கி வருவதால் ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் இரண்டு நட்சத்திர தகுதி பெற்றுள்ளது. தேசிய நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ. 60.58 லட்சம் மதிப்புள்ள 24 முதன்மை திட்ட ஆய்வுகளுக்கான நிதி உதவி பெற்றுள்ளது.
கல்வி, தொழில்துறை ஒத்துழைப்பிற்காக முன்னணி தொழிற்சாலைகள், நிறுவனங்களுடன் 82 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. 35 ஆயிரத்து 34 புத்தகத் தொகுதிகள், தேசிய பன்னாட்டு இதழ்கள், செய்தித்தாள்கள், பியர்சன் மின் நுாலகம், என் லிஸ்ட் மற்றும் டெல்நெட் போன்ற டிஜிட்டல் வளங்களைக் கொண்ட உயர் தொழில்நுட்ப நுாலகம் செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசின் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களின் மூலம் மாதந்தோறும் ரூ. ஆயிரம் உதவித்தொகையினை 1032 தகுதியுள்ள மாணவர்கள் பெற உதவியுள்ளது. விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி மற்றும் விடுதி கட்டணம் முழுவதையும் கல்வி உதவித் தொகையாக வழங்கியுள்ளது. இதுவரை 13 ஆயிரத்து 375 இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் உருவாக்கப்பட்டுள்ளனர்.