/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பேரிகார்டில் டூவீலர் மோதி எஸ்.எஸ்.ஐ., பலி
/
பேரிகார்டில் டூவீலர் மோதி எஸ்.எஸ்.ஐ., பலி
ADDED : ஜூன் 25, 2025 01:46 AM

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே எஸ்.எஸ்.ஐ., விஜயகுமார் 52, ஓட்டி வந்த டூவீலர் பேரிகார்டில் மோதி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பலியானார்.
அருப்புக்கோட்டை டவுன் ஸ்டேஷனில் விஜயகுமார் எஸ்.எஸ்.ஐ, ஆக பணிபுரிந்தார். திருடு போன டூவீலரை தாராபுரத்தில் இருந்து மீட்டு ஓட்டி வந்தார். நேற்று மாலை 5:15 க்கு மதுரை- துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வந்த போது காரியாபட்டி எஸ்.கல்லுப்பட்டி விலக்கில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
'ஹெல்மெட்' அணியாததால் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., மதிவாணன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.