/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புனரமைப்புக்காக செவல் கண்மாயில் கரைக்கப்பட்ட ரூ.4.50 கோடி நிதி
/
புனரமைப்புக்காக செவல் கண்மாயில் கரைக்கப்பட்ட ரூ.4.50 கோடி நிதி
புனரமைப்புக்காக செவல் கண்மாயில் கரைக்கப்பட்ட ரூ.4.50 கோடி நிதி
புனரமைப்புக்காக செவல் கண்மாயில் கரைக்கப்பட்ட ரூ.4.50 கோடி நிதி
ADDED : மார் 26, 2025 05:28 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை செவல் கண்மாயை புரைமைப்பு பணி செய்ய கோடி கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு பணியை கிடப்பில் போட்டதால் நிதி வீணானது.
அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் உள்ளது செவல் கண்மாய். நகராட்சி 1, 2, 3, 4 வார்டுகள் வழியாக செல்லும் செவல் கண்மாய் 15 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. முன்பு, இந்த பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக இருந்த கண்மாய் நாளடைவில் பராமரிப்பு இல்லாமல் கெட்டு போனது. ஆகாயத்தாமரைகள், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து, கழிவு நீர் குளமாக மாறி விட்டது.
இந்த பகுதி மக்களின் பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின், கண்மாயை நகராட்சி மூலம் புரைமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு 4.50 கோடி ரூபாய் நிதியில் பணி ஒரு ஆண்டிற்கு முன்பு துவங்கப்பட்டது. மந்த கதியில் பணி நடந்தது. ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு, கண்மாயில் இருந்த தண்ணீரை வெளியேற்றி, கண்மாயின் ஒரு பகுதியில் தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்தது. அது சமயம் தொடர் கனமழையால் பணிகள் நிறுத்தப்பட்டது. பின்னர் கண்மாய் நிறைந்து விட்டது. மீண்டும் ஆகாய தாமரைகள் வளர்ந்து விட்டன. இதனால், பணிகளை நிறுத்தி விட்டனர். மீண்டும் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
கோடை காலமாக இருப்பதால், இருக்கின்ற தண்ணீரை வெளியேற்றாமல் இருந்தால் நிலத்தடி நீர்மட்டம் குறையாது. கண்மாயின் ஒரு பகுதியில் சலவை தொழிலாளர்கள் டோபி கானா அமைத்து துணிகளை துவைத்து வருகின்றனர். ஏற்கெனவே 2 ஆண்டுகளாக கண்மாய் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் செய்து விட்டனர். தற்போது நிறைந்துள்ள கண்மாய் தண்ணீரை வெளியேற்றுவதால், நிலத்தடி நீர் பாதிப்பதுடன் எங்களால் தொழில் செய்ய முடிவதில்லை என சலவை தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.
ஆனால், நகராட்சி நிர்வாகம் எதையும் கண்டு கொள்வதில்லை. கோடி கணக்கான நிதியை வீணாக்கி விட்டு, கண்மாயை மீண்டும் பராமரிக்க எந்த நிதியை ஒதுக்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் தான் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.