/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிரதமர் மோடி பற்றிய குறும்படம் * கே.ஆர்.எஸ்., சி.பி.எஸ்.இ., பள்ளியில் திரையிடல்

ADDED : செப் 26, 2025 01:57 AM
மதுரை: மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் (கே.ஆர்.எஸ்.,) சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு, பிரதமர் மோடியின் சிறுவயது வாழ்க்கை வரலாறு குறித்த 'சலோ ஜீட்டா கெயின்' (வாங்க வெற்றி நமதே) என்ற குறும்படம் திரையிடப்பட்டது.
மத்திய கல்வி அமைச்சகம் நாடுமுழுவதும் இக்குறும்படத்தை சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு செப்.17 முதல் அக்.2 வரை திரையிட உத்தரவிட்டுள்ளது. மதுரை கே.ஆர்.எஸ்., சி.பி.எஸ்.இ., பள்ளியில் மூன்று முதல் பிளஸ் 2 வரையான மாணவர்களுக்கு நேற்று திரையிடப்பட்டது.
மாணவர்கள் கூறுகையில், பிரதமர் மோடி சிறுவயதில் சுவாமி விவேகானந்தரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர் என தெரிந்துகொண்டோம். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் நாட்டின் பிரதமர் என்ற உயர்ந்த பதவியை ஏற்றது குறித்தும், உண்மை, நேர்மை, தியாகம் என எங்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் குறும்படத்தில் இடம் பெற்றிருந்தது என நெகிழ்ச்சி தெரிவித்தனர். குறும்படம் குறித்த கருத்துக்களை கடிதம் மூலம் பிரதமர் மோடிக்கு இப்பள்ளி மாணவர்கள் அனுப்பினர். ஆசிரியைகள் கோமதி, ஷோபனா ஏற்பாடு செய்தனர்.