ADDED : செப் 26, 2025 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கோவை மாநகர் மாட்ட செயலர் கார்த்திக் மாற்றப்பட்டு, செந்தமிழ்செல்வன் அம்மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கார்த்திக்கிற்கு, தி.மு.க., தீர்மானக்குழு செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக செந்தமிழ் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். மாவட்ட செயலர் பதவியை இழந்த கார்த்திக், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவின் தீவிர ஆதரவாளர்.
மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தீவிர ஆதரவாளர் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.