ADDED : ஜூன் 25, 2025 02:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருகர் மாநாடு, இந்து முன்னணி நடத்திய பக்தி மாநாடு. அதில் அரசியல் கட்சிகள் பின்னணியில் இருந்ததால், எதிர்க்கட்சிகள், அதை அரசியல் மாநாடாக கருதினர். அங்கு திரையிட்ட, ஆவணப் படத்தில், அண்ணாதுரை, ஈ.வெ.ரா., குறித்த வார்த்தைகளை தவிர்த்திருக்க வேண்டும். அவர்களை முன்னோடிகளாக வைத்துள்ள பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, இச்சம்பவம் நடந்தது வருத்தம் அளிக்கிறது.
திருமாவளவன் கோவிலுக்கு சென்றுவிட்டு, விபூதி வைத்துவிட்டு துடைத்தது சரியான செயல் அல்ல. அரசியல் கட்சி என்பது, அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக இருந்தால்தான், ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது அனைவரையும் சமமாக பாவித்து, திட்டங்களை செயல்படுத்த முடியும். சுதந்திரத்துக்குப் பின் நடந்த ஆட்சிகளில், மிக மோசமானதாக, தி.மு.க., ஆட்சி உள்ளது.
- தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,