sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் திருமணத்துக்கு வெனிஸ் மக்கள் எதிர்ப்பு

/

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் திருமணத்துக்கு வெனிஸ் மக்கள் எதிர்ப்பு

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் திருமணத்துக்கு வெனிஸ் மக்கள் எதிர்ப்பு

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் திருமணத்துக்கு வெனிஸ் மக்கள் எதிர்ப்பு

9


ADDED : ஜூன் 15, 2025 04:21 AM

Google News

9

ADDED : ஜூன் 15, 2025 04:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெனிஸ்: உலகின் மூன்றாவது பெரிய கோடீஸ்வரான, 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசோஸ், 61. கடந்த மே நிலவரப்படி இவரின் சொத்து மதிப்பு 18 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். இவர் 1993-ல் மெக்கன்ஸி ஸ்காட் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

ஜெப் பெசோஸ் - ஸ்காட் இருவரும் இணைந்து, 1994-ல் அமேசானை துவங்கினர். ஸ்காட் நிறுவனத்தின் முதல் கணக்காளராக இருந்தார். வணிகத் திட்டங்கள் மற்றும் ஆரம்பகால நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்த ஜோடியின் திருமண உறவு, 25 ஆண்டுகளுக்கு பின், 2019ல் முறிந்தது. அப்போது அமேசானின், 2.66 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 4 சதவீத பங்குகளை ஸ்காட்டுக்கு ஜெப் பெசோஸ் பிரித்து வழங்கினார்.

உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அதன் பின், 55 வயதான முன்னாள், 'டிவி' நிருபர் லாரன் சான்செஸை காதலித்தார். இவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.

இருவரின் திருமணம் இத்தாலியின் வெனிசில் உள்ள தீவில் வரும் 24 முதல் 26 வரை மூன்று நாட்கள் நடக்க உள்ளது.

மொத்தம், 100 கோடி ரூபாய் செலவில் மிக ஆடம்பரமாக இந்த திருமணம் நடக்க உள்ளது. இதற்காக வெனிசின் அனைத்து நட்சத்திர விடுதிகள், படகு டாக்சிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், 'கோடீஸ்வரர்களின் திருமணங்களால் வெனிசில் விலைவாசி உயர்கிறது.

'சுற்றுலா தொழிலையே நாங்கள் நம்பி உள்ளோம். இத்தகைய திருமணம் எங்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதிக்கிறது' என்றனர்.

அத்துடன் 'பெசோசுக்கு இடமில்லை' மற்றும் 'வெனிஸ் விற்பனைக்கு அல்ல' போன்ற முழக்கங்களுடன் எதிர்ப்பு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us