/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஸ்ரீ ரமண மகரிஷியின் 145வது ஜெயந்தி கொண்டாட்டம்
/
ஸ்ரீ ரமண மகரிஷியின் 145வது ஜெயந்தி கொண்டாட்டம்
டிச 23, 2024

புதுதில்லி லோதி சாலையில் அமைந்துள்ள ரமணா கேந்திராவில் கலாசார நிகழ்வு ஜெயந்தி அய்யர் அழைப்புடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, கேந்திரத்தின் தலைவர் நீதியரசர் (ஓய்வு) கே. ராமமூர்த்தி, சுவாமி துர்கேசானந்த சரஸ்வதி, கேந்திரா செயலர் கணேசன், ஆகியோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கினர். கணேசனின் சிறிய அறிமுகத்திற்குப் பிறகு, நீதியரசர் (ஓய்வு) ராமமூர்த்தி உரையாற்றினார்.
தொடர்ந்து, சுவாமி துர்கேசானந்த சரஸ்வதி தனது சிறப்பான உரையால் பக்தர்கள் மற்றும் வந்திருந்த விருந்தினர்களை மயக்கினார். சுவாமிஜி ஆன்மீகப் பாதையில் தேடுபவர்களை வழி நடத்துகிறார் மற்றும் ஆன்மீக ஞானத்தைத் தேடுபவர்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதற்காக இந்து வேதங்கள் பற்றிய ஆழமான அறிவை வழங்குவதில் தனது நேரத்தை முழுமையாக அர்ப்பணிக்கிறார்.
மேரி இளங்கோவன், தில்லியில் மிகவும் பரிச்சியமான பரத நாட்டியக் கலைஞரும், இளங்கோவன் கோவிந்தராஜன் மற்றும் அவரது குழுவினரும் பகவான் ரமண மகரிஷிக்கு நாட்டிய சமர்ப்பணம் செய்தனர். கேந்திராவின் துணைத் தலைவர் ஆதர்ஷ் பாட்டியானியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவருக்கும் அறுசுவை பிரசாதம் வழங்கப்பட்டது
- - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்