sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

அம்ருதசரி குல்ஜா

/

அம்ருதசரி குல்ஜா

அம்ருதசரி குல்ஜா

அம்ருதசரி குல்ஜா


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்முறை


முதலில் கோதுமை மாவை சலித்து, அகலமான பாத்திரத்தில் போடவும். இதில் தயிர், எண்ணெய், சமையல் சோடா, பேக்கிங் பவுடர் சேர்க்கவும். அதன்பின் சர்க்கரை, உப்பு, வெதுவெதுப்பான பால் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும். மாவு மீது, சுத்தமான ஈரத்துணியை போட்டு மூடி வைக்கவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து கிண்ணத்தில் போட்டு மசித்து கொள்ளவும். இதில் சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்க்கவும். இக்கலவையில் சாட் மசாலா, தனியா துாள், மிளகாய் துாள், சீரக துாள், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

ஏற்கனவே பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை, உருண்டைகளாக்கி தட்டி கொள்ளவும். அதில் உருளைக்கிழங்கு ஸ்டப்பை வைத்து மூடி, மீண்டும் தட்டவும். அதன்பின் அடுப்பில் தோசைக்கல் வைத்து, ஆலிவ் ஆயில் ஊற்றவும்.

தட்டி வைத்துள்ள மாவை போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகும் வரை, திருப்பி போடவும். இதுவே அம்ருதசரி குல்ஜா. தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ், தேங்காய் சட்னி அல்லது காபுல் கடலை சப்ஜி பொருத்தமாக இருக்கும்.




    • Dinamalar Events


    Dinamalar