Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ மரவள்ளி கிழங்கு மசாலா செய்யலாமா?

 மரவள்ளி கிழங்கு மசாலா செய்யலாமா?

 மரவள்ளி கிழங்கு மசாலா செய்யலாமா?


ADDED : ஜன 03, 2026 07:03 AM

Follow on Google

ADDED : ஜன 03, 2026 07:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

சாப்பாட்டுக்கு தொட்டுக்க, மரவள்ளி கிழங்கு மசாலா எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

l மரவள்ளி கிழங்கு - 1/4 கிலோ

l கடுகு - 1/2 டீஸ்பூன்

l இஞ்சி - சிறிது

l பச்சை மிளகாய் - 1

l கறிவேப்பிலை - ஒரு கொத்து

l சின்ன வெங்காயம் - 1 கப்

l தக்காளி - 1

l மல்லி தூள் - 1 டீஸ்பூன்

l மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

l மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

l கொத்தமல்லி - சிறிதளவு

l தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

l உப்பு தேவையான அளவு

செய்முறை

முதலில் மரவள்ளி கிழங்கை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் மல்லி துாள், மிளகாய் துாள் சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

பின், கொதி வந்ததும் வேக வைத்துள்ள மரவள்ளி கிழங்கை சேர்த்து தண்ணீர் சுண்டும் அளவிற்கு நன்கு வதக்கவும்.

இதில், தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து கொத்தமல்லி தழைகளை துாவி இறக்கவும்.

அவ்வளவுதான் சுவையான மரவள்ளிக்கிழங்கு மசாலா தயார். இதை சாம்பார் சாதத்துடன் தொட்டு சாப்பிடும் போது, சுவை அருமையாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap