தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/அறுசுவை/ செட்டிநாடு ஸ்பெஷல் கும்மாயம் செய்யலாமா!

 செட்டிநாடு ஸ்பெஷல் கும்மாயம் செய்யலாமா!

 செட்டிநாடு ஸ்பெஷல் கும்மாயம் செய்யலாமா!


ADDED : ஜூன் 19, 2026 10:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 10:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-- நமது நிருபர் --

பொதுவாக வீட்டில் எந்த ஒரு நல்ல காரியங்கள், விசேஷங்கள் நடந்தால் இனிப்புடன் கொண்டாடுவது வழக்கம். வழக்கமாக, வீட்டில் சர்க்கரை பொங்கல், பாயசம் செய்வோம். ஆனால் கும்மாயம் செய்தும் அசத்தலாம்.

கும்மாயம் என்பது ஒரு வகையான ஸ்வீட். தமிழகத்தின் செட்டி நாடு மற்றும் காரைக்குடி பகுதிகளில் பாரம்பரியாக செய்யப்படும் சத்தான இனிப்பு பலகாரம். மற்ற ஸ்வீட்டுகளை விட இது வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். குழந்தைகள் விரும்பும் ஸ்வீட் ஆகவும் கண்டிப்பாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

l முழு வெள்ளை உளுந்து - ஒரு கப்

l பாசி பருப்பு - கால் கப்

l பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி - கால் கப்

l வெல்லம் அல்லது பனங்கருப்பட்டி - ஒரு கப்

l நெய் தேவையான அளவு

l ஏலக்காய் துாள் - அரை டீஸ்பூன்

செய்முறை

அடுப்பை ஆன் செய்து கடாய் வைத்து உளுந்து, பாசி பருப்பு, அரிசி சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து கொள்ளுங்கள். பின், மிக்ஸியில் போட்டு நைசான மாவாக அரைத்து சலித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். வெல்லம் கரைந்ததும் அடுப்பை 'ஆப்' பெய்து விட்டு, துாசி நீங்குவதற்காக வடிகட்டி தனியாக எடுத்து கொள்ளுங்கள்.

வடிகட்டிய வெல்ல கரைசலில், அரைத்து வைத்துள்ள மாவை போட்டு, கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும். மாவு கலவையை பாத்திரத்தில் ஊற்றி, மிதமான தீயில் கிளறவும். பாதியளவு நெய், ஏலக்காய் துாள் சேர்த்து, கைபடாமல் கிளறவும். அல்வா பதத்திற்கு வரும் போது நெய் சேர்த்து கிளறி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு ஸ்டைல் கும்மாயம் தயார்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us