sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

சுட்ட கத்திரிக்காயில் சுவையான துவையல்

/

சுட்ட கத்திரிக்காயில் சுவையான துவையல்

சுட்ட கத்திரிக்காயில் சுவையான துவையல்

சுட்ட கத்திரிக்காயில் சுவையான துவையல்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கத்திரிக்காயை உணவில் எடுத்துக் கொள்வதால், மனிதர்களுக்கு பல நன்மைகள் உள்ளன. செரிமான பிரச்னையை தடுப்பதுடன், நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் கொழுப்பை குறைக்கிறது. கத்திரிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுப்பதுடன், புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது. இதனால் உணவில் கண்டிப்பாக கத்திரிக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர்களும் கூறுகின்றனர்.

பெரும்பாலும் வீடுகளில் கத்திரிக்காயை பயன்படுத்தி புளிகுழம்பு, பிரை செய்வர். ஆனால் கத்திரிக்காயில் சூப்பரான துவையலும் செய்யலாம்.

செய்முறை


கத்திரிக்காயில் இருந்து தண்டுகளை அகற்றி, சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு நீரில் வைக்கவும். அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி, சீரகம் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, பின் காய்ந்த மிளகாய் சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தனியாக ஆறவைத்து விடவும்.

வாணலியில் மீண்டும் எண்ணெய் ஊற்றி, சிறிய துண்டுகளாக வெட்டி வைத்திருந்த கத்திரிக்காய்களை போட்டு மென்மையாகும் வரை வதக்கவும். கத்திரிக்காய் வெந்ததும், தக்காளியை நறுக்கி அதனுடன் போட்டு வதக்கவும். புளி துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கி, மஞ்சள், கல் உப்பு சேர்த்து பத்து நிமிடம் வேக விடவும்.

அதற்குள் மிக்ஸியில் கொத்தமல்லி, சீரகம், மிளகாய் போட்டு, கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவும். கடுகு பொரிந்த பின் பூண்டு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கி, அனைத்தையும் ஒன்றாக போட்டு கிளறிவிட்டால் கத்திரிக்காய் துவையல் தயார். சப்பாத்தி, இட்லிக்கு வைத்து சாப்பிடலாம்.

- நமது நிருபர் -




    • Dinamalar Events


    Dinamalar