தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/அறுசுவை/ ஆரோக்கியம் நிறைந்த வரகு உக்காரை

 ஆரோக்கியம் நிறைந்த வரகு உக்காரை

 ஆரோக்கியம் நிறைந்த வரகு உக்காரை


ADDED : நவ 22, 2025 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2025 04:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: இனிப்புடன் எந்த வேலையை துவங்கினாலும், சிறப்பாக முடியும். உடலுக்கு ஆற்றலை அளிக்கும் வகையில் இந்த வாரம் வரகு உக்காரையை செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

l வரகு --- 100 கிராம்

l பாசிப்பருப்பு --- 100 கிராம்

l வெல்லம் -- 150 கிராம்

l நெய் -- 50 கிராம்

l முந்திரி -- 10

l தேங்காய் துருவல் --- கால் கப்

l ஏலக்காய், சுக்குத்துாள் -- போதுமான அளவு

செய்முறை

l வரகு மற்றும் பாசிப்பயிறு இரண்டையும் மிக்ஸியில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.

l பின்னர், இரண்டையும் குக்கரில் வேக வைக்கவும். குக்கரில் இல்லையென்றால் வழக்கமாக சமைப்பது போன்று சமைக்கவும். இரண்டும் மிகவும் குழைவாக இருக்க வேண்டும். குழைந்து இருந்தால் மட்டுமே சுவை அதிகமாக இருக்கும்.

l வெல்லத்தை நன்கு பொடியாக்கிக் கொண்டு வெல்லபாகு காய்ச்சிக் கொள்ளவும்.

l வேக வைத்துள்ள வரகு, அரிசியில் சேர்த்து நன்கு கிளறவும்.

l ஏலக்காய் துாள், சுக்குத்துாள் சேர்க்கவும். இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் வரகு உக்காரை தயார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us