sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

மட்டன் கறி தோசை

/

மட்டன் கறி தோசை

மட்டன் கறி தோசை

மட்டன் கறி தோசை


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவையான பொருட்கள்: மட்டன் கொத்து கறி - 200 கிராம்முட்டை - மூன்றுதோசை மாவு - ஒரு கப்பெரிய வெங்காயம் - ஒன்றுபழுத்த தக்காளி - ஒன்றுஇஞ்சி பூண்டு விழுது - அரை ஸ்பூன்மஞ்சள் துாள் - அரை ஸ்பூன்மிளகாய் துாள் - அரை ஸ்பூன்கொத்தமல்லி துாள் - முக்கால் ஸ்பூன்மிளகு துாள் - ஒரு ஸ்பூன்சோம்பு - கால் டீஸ்பூன்எண்ணெய் - மூன்று ஸ்பூன்உப்பு - தேவையான அளவு

செய்முறை : அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி, பூண்டு பச்சை வாசம் போனவுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிவிட்டுக்கொள்ளுங்கள்.தக்காளி நன்கு மென்மையாக வதங்கியவுடன் அதில் மஞ்சள் துாள், மிளகாய் துாள், கொத்தமல்லி துாள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும். மசாலாக்களின் பச்சை வாசம் போனவுடன் தண்ணிரில் அலசிய மட்டன் கீமாவை சேர்த்து நன்கு கிளறவும்.

தற்போது அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளுங்கள்.மட்டன் மசாலாக்களுடன் கலந்து நன்கு வெந்தவுடன் இறக்கினால் மட்டன் தோசைக்கு தேவையான கீமா மசாலா தயார்.இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி அதில் முட்டையை உடைத்து ஊற்றிக்கொள்ளவும். பிறகு அதனுடன் சிறிதளவு நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் தோசை கல்லை வைத்து மிதமான தீயில் சூடாக்கிக்கொள்ளவும். தோசை கல் சூடானவுடன் தோசை மாவை எடுத்து ஊத்தப்பம் போல் ஊற்றிக்கொள்ளவும். தோசை ஓரளவு வெந்ததும் ஒரு கரண்டி கீமா கலவையை அதன் மேல் ஊற்றி பரப்பி விடவும்.

பின்பு எண்ணெயை அதன் மேல் சுற்றி ஊற்றி மிளகு துாள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை துாவி திருப்பி போட்டு தோசையை அழுத்தி விடவும். தோசை நன்கு வெந்ததும் எடுத்தால் சுவையான மதுரை மட்டன் கறி தோசை சாப்பிட ரெடி.




    • Dinamalar Events


    Dinamalar