தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ கோடை காலத்துக்கு ஏற்ற அன்னாசி ரசம்

 கோடை காலத்துக்கு ஏற்ற அன்னாசி ரசம்

 கோடை காலத்துக்கு ஏற்ற அன்னாசி ரசம்


ADDED : மார் 21, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

கோடை வெப்பத்தின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. உடலுக்கு குளிர்ச்சி தரும் சுவையான உணவை விரும்புவோம். அன்னாசி பழ ரசம் சுவைத்துள்ளீர்களா. உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. செய்வதும் எளிது.

தேவையான பொருட்கள்

l அன்னாசி பழ துண்டுகள் - 1 கப்

l • துவரம் பருப்பு - அரை கப் (வேக வைத்தது)

l • தக்காளி - 1

l • புளிச்சாறு - 2 ஸ்பூன்

l • ரசப்பொடி - 2 ஸ்பூன்

l • பச்சை மிளகாய் - 2

l • வெல்லம் - சிறிதளவு

l உப்பு - சுவைக்கு தேவையான அளவு

l • கறிவேப்பிலை - ஒரு கொத்து

l • கொத்துமல்லி -- ஒரு கைப்பிடி

l • மஞ்சள் துாள் - அரை ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

l நெய் அல்லது எண்ணெய் - 2 ஸ்பூன்

l கடுகு - 1 ஸ்பூன்

l சீரகம் - 1 ஸ்பூன்

l காய்ந்த மிளகாய் - 2

l பெருங்காயம் - அரை ஸ்பூன்

செய்முறை

முதலில் அரை கப் அன்னாசி பழத்துண்டுகளை, மிக்சியில் நைசாக அரைக்கவும். மிச்சமுள்ள அரை கப் அன்னாசி பழத்துண்டுகளை அப்படியே வைக்கவும். ஒரு பாத்திரத்தில், நறுக்கிய தக்காளி, அன்னாசி பழ துண்டுகள், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புளிச்சாறு, மஞ்சள் துாள், உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பச்சை வாசம் போகும் வரை, ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

ஏற்கனவே வேக வைத்த துவரம் பருப்பை மசித்து, ரசத்தில் சேர்த்து நன்றாக கலக்கவும், ரசத்துக்கு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நுரைத்து வந்தவுடன் நறுக்கிய கொத்துமல்லி சேர்த்து கிளறவும். அதிகமாக கொதிக்க வைக்கக்கூடாது. கொதித்தால் சுவை மாறிவிடும்.

வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும். காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு தாளித்து கொட்டினால், சுவையான அன்னாசி பழ ரசம் தயார். இதை சோற்றுடன் பிசைந்து சாப்பிடலாம். சூப் போன்றும் குடிக்கலாம். சுவை அற்புதமாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us