sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

அறுசுவை பக்கம்

/

அறுசுவை பக்கம்

அறுசுவை பக்கம்

அறுசுவை பக்கம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

எலுமிச்சை ஜூஸில் சிறிதளவு புதினா இலைகள் சேர்த்தால் ஜூஸின் வாசனை அதிகமாகும்.

முளைகட்டிய கொண்டைக்கடலை அரைத்து சப்பாத்தி செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும். அதே சமயம் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை தரும்.

தோல் உரித்த உருளைக்கிழங்குகளில் சில துளிகள் வினிகரை தெளித்து குளிர்பதன பெட்டியில் வைத்தால் கெடாமல் இருக்கும்.

அடை, வடை மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், இரண்டு ஸ்பூன் சோள மாவு சேர்த்தால் உடனடியாக ஊறி மாவு கெட்டியாகிவிடும்.

மோர்க்குழம்பு செய்யும்போது, அன்னாசி பழ துண்டுகளை சேர்த்தால் சுவை மேலும் கூடும்

சாம்பாரில் கொஞ்ம் வறுத்த கசகசாவை சேர்த்தால் சாம்பாரின் சுவை அதிகரிக்கும்.

இட்லி மாவில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து அவித்தால், இட்லி மிருதுவாக இருக்கும்

சமைக்கும்போது குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால், தேங்காய் பால் சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.

சாம்பார் செய்ய துவரம்பருப்பை வேகவைக்கும்போது ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்ததால் சாம்பார் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

அரிசி மாவை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்த பிறகு முறுக்கு, தட்டை செய்தால் மொறு மொறுப்பாக இருக்கும்.




    • Dinamalar Events


    Dinamalar