sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

பானுவாசர ஸ்பெஷல்

/

வயலில் மகளுக்கு வித்தியாசமாக திருமணம் செய்த விவசாயி

/

வயலில் மகளுக்கு வித்தியாசமாக திருமணம் செய்த விவசாயி

வயலில் மகளுக்கு வித்தியாசமாக திருமணம் செய்த விவசாயி

வயலில் மகளுக்கு வித்தியாசமாக திருமணம் செய்த விவசாயி


ADDED : ஜூன் 08, 2025 04:06 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 04:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதுவாக ஏழை, நடுத்தர வர்க்கத்து மக்களும், தங்களின் மகன் அல்லது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்ய வேண்டும் என, விரும்புவர். பணம் இல்லை என்றாலும், அதிக வட்டிக்கு கடன் வாங்கியாவது, பிள்ளைகளுக்கு திருமணம் செய்து பார்ப்போர் அதிகம். ஊரிலேயே பெரிய திருமண மண்டபத்தை தேடுவர்.

பிள்ளைகளுக்கு அவ்வளவாக படிப்பறிவு இல்லை என்றாலும், லட்சக்கணக்கில் செலவு செய்து, திருமணம் செய்து பெற்றோர் ஆனந்திப்பதை, நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அனைத்து வசதிகளும் கொண்ட விவசாயி ஒருவர், தன் மகளை லண்டனுக்கு அனுப்பி, உயர் கல்வி பெற வைத்தார். அவருக்கு புதுமையான முறையில் திருமணம் செய்து வைத்தார்.

முற்போக்கு சிந்தனை


சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின், சிஞ்சள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தயானந்த். இவர் முற்போக்கு சிந்தனை உள்ளவர். இவரது மகள் ரஷ்மி, லண்டனில் சட்ட பட்டப்படிப்பு முடித்துவிட்டு, சொந்த கிராமத்துக்கு திரும்பினார். இவருக்கும், பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் குபேர் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கிராமங்களில் சிலர் நெருங்கிய சொந்த, பந்தங்கள் முன்னிலையில் தங்களின் வீட்டிலேயே பிள்ளைகளுக்கு திருமணம் செய்வர். பண வசதி உள்ளவர்கள், பெரிய மண்டபம் ஏற்பாடு செய்து, தடபுடலாக திருமணத்தை நடத்துவர்,

ஆனால் தயானந்த், இயற்கையின் மடியில் மகளுக்கு திருமணத்தை நடத்த விரும்பினார். லண்டனில் படித்தவர் என்றாலும், தந்தையின் விருப்பத்துக்கு ரஷ்மி குறுக்கே நிற்கவில்லை. மணமகன் குபேரின் குடும்பத்தினரும் சம்மதித்தனர்.

பாராட்டு


தன் வயலிலேயே சில நாட்களுக்கு முன், இவர்களின் திருமணம் நடந்தது. விருந்தும் கூட இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட சிறு தானியங்கள், காய்கறிகள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. ஆடம்பரம் இல்லாமல், அதே நேரத்தில் புதுமையான முறையில் மகளுக்கு திருமணம் செய்த தந்தையை பலரும் பாராட்டினர்.

தன் நிலத்தையே வன சூழலாக மாற்றியுள்ளார். அழிவின் எல்லையில் உள்ள மரக்கன்றுகள், செடிகளை சேகரித்து கொண்டு வந்து, வயலில் நட்டு வளர்த்துள்ளார். இங்கு தும்பிகள், வண்ணத்து பூச்சிகளின் ரீங்காரம் நிரந்தரமாக கேட்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருந்தார். மகளின் திருமணத்துக்காக செடி, கொடிகள் மூலமாகவே அலங்கரித்திருந்தார். இதை பார்த்து பலரும் வியந்தனர்.

இது குறித்து, தயானந்த் கூறியதாவது:

இதற்கு முன் திருமணம் சொந்த, பந்தங்கள் முன்னிலையில் வீடுகளில் நடந்தன. இப்போதும் ஆங்காங்கே நடக்கின்றன. சமீப ஆண்டுகளாக சிறிய கட்டடங்களுக்குள் நடக்கின்றன. என் மகளுக்கு இயற்கையோடு ஒன்றியபடி திருமணம் நடத்த வேண்டும் என, நான்கு மாதமாக ஆலோசித்து, வயலில் நடத்த முடிவு செய்தேன்.

என் தோட்டத்தில் விளைந்துள்ள வாழை, மூங்கில், தென்னை, செண்டுப்பூ, சாமந்தி பூக்களை கொண்டு, மணமேடை அமைத்திருந்தோம். அதே போன்று என் தோட்டத்தில் விளைந்த தர்ப்பூசணி, மாம்பழம் உட்பட பல்வேறு பழங்களின் சாறுகள், இளநீர் பாயசம், சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட, ஆரோக்கியமான உணவை விருந்தினர்களுக்கு பரிமாறினோம். தோத்தாப்புரி மாங்காய் மற்றும் எலுமிச்சை செடிகள் கொண்ட தாம்பூலம் வழங்கபட்டது.

ஆடம்பரம் இல்லாமல், என் மகளின் திருமணத்தை எளிமையாக நடத்தினேன். இன்றைய காலத்தில் பலரும் விவசாயத்தை விட்டு விலகுகின்றனர். மறந்து போகும் விவசாயத்தை நினைவூட்டும் நோக்கில் நான் திட்டமிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us