/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
தைராய்டு கட்டியை அலட்சியப்படுத்தக் கூடாது
/
தைராய்டு கட்டியை அலட்சியப்படுத்தக் கூடாது
ADDED : ஜூன் 12, 2025 10:26 PM

தைராய்டு சுரப்பியில் கட்டி தோன்றினால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாக மருத்துவர் ஆலோசனை பெற்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நிர் வாகத்தினர் கூறியதாவது:
தைராய்டு சுரப்பி என்பது கழுத்தின் முன்பகுதியில் உள்ளது. நமது உடலுக்கு தேவையான தைராய்டு ஹார்மோன் இங்கு சுரக்கிறது. தைராய்டு சுரப்பியில் மூன்று விதமான பிரச்னைகள் ஏற்படலாம். ஒன்று தைராய்டு அதிகமாக வேலை செய்தல், இரண்டாவது வேலை செய்யாமல் போவது, மூன்றாவது புற்றுநோய் கட்டி.
தைராய்டு சுரப்பியில் கட்டி தோன்றினால் அதை அலட்சியப்படுத்தாமல், மருத்துவர் ஆலோசனை பெறவேண்டும். உரிய பரிசோதனை செய்து, இது சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய் கட்டியா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். புற்றுநோய் என உறுதி செய்யப்பட்டால், அறுவை சிகிச்சை வாயிலாக சுரப்பியை முழுவதுமாக அகற்ற வேண்டும். சிகிச்சைக்குப்பின், கழுத்தில் மீதம் இருக்கும் தைராய்டு அணுக்களில் வேறு எங்காவது புற்றுநோய் பரவியுள்ளதா என கண்டறிய வேண்டும். இதற்கு நியூக்ளியர் அயோடின் 131 ஸ்கேன் பரிந்துரைக்கப்படும்.
சுரப்பியை தாண்டி பரவியிருக்கும் புற்றுநோயை அழிக்க அயோடின் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இரண்டு நாட்கள் மருத்துவமனை தனிப்பிரிவில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். வீட்டுக்கு சென்றவுடன் ஒருவாரத்துக்கு தனி அறையில் தங்கி இருக்க வேண்டும்.
சிகிச்சைக்குப்பின், தைராய்டு மாத்திரையை வாழ்நாள் முழுவதும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்புற்றுநோய் குணப்படுத்தக்கூடியதுதான். இதற்கு அறுவை சிகிச்சை மற்றும் அயோடின் 131 சிகிச்சை வசதி கே.எம்.சி.எச்.,ல் உள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மறு ஆலோசனை முகாம் மருத்துவமனையில் நடக்கிறது. கடந்த 2ம் தேதி துவங்கிய இம்முகாம், வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.
இதில், சிகிச்சைக்கு எந்த மருத்துவமனைக்கு செல்வது, எந்த டாக்டரை அணுகுவது என ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், மீண்டும் ஒரு பரிசோதனை செய்து புற்றுநோயை உறுதி செய்து கொள்ளலாம் என, நினைப்போருக்கு, சலுகை கட்டணத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 87548- 87568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.