/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
தோஷங்களை நீக்கும் சேஷாத்திரிபுரம் சனீஸ்வரர் கோவில்
/
தோஷங்களை நீக்கும் சேஷாத்திரிபுரம் சனீஸ்வரர் கோவில்
தோஷங்களை நீக்கும் சேஷாத்திரிபுரம் சனீஸ்வரர் கோவில்
தோஷங்களை நீக்கும் சேஷாத்திரிபுரம் சனீஸ்வரர் கோவில்
ADDED : மே 26, 2025 11:40 PM

சனி தோஷம் உள்ளவர்கள், சனியின் தீவிர பிடியில் சிக்கி தவிப்பவர்கள், சனி பெயர்ச்சி நடந்து கொண்டிருக்கும் ராசிக்காரர்கள் வாரந்தோறும் சனிக்கிழமை சனீஸ்வரரை வழிபட்டால் நல்லது நடக்கும். இதனால் சனிக்கிழமை தோறும் சனீஸ்வரர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
பெங்களூரு நகரில் பல இடங்களில் பெரிய சனீஸ்வரர் கோவில்கள் உள்ளன. இதில் சில பகுதிகளில் இருக்கும் சக்தி வாய்ந்த சனீஸ்வரர் கோவிலை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. இதுபோன்று சக்தி வாய்ந்த கோவில் சேஷாத்திரிபுரத்தில் உள்ளது.
ஓக்லிபுரம் ரயில்வே மேம்பால பகுதியில் இருந்து மல்லேஸ்வரம் செல்லும் சாலையில் ம.ஜ.த., தலைமை அலுவலகத்திற்கு முன்பு ஒரு சிக்னல் உள்ளது. இந்த சிக்னலுக்கு முன்பு இடது புறமாக சிறிய சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வாரம்தோறும் சனிக்கிழமை காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் சனி தோஷத்தில் இருந்து விடுபட நல்லெண்ணெயை கோவில் முன்பு உள்ள தீ சட்டியில் இட்டு சனீஸ்வரரை மனம் உருகி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தனது வாகனமான காகம் மீது கம்பீரமான மீசையுடன் அமர்ந்திருக்கும் சனீஸ்வரரை அருகில் நின்று தரிசிக்கும் வாய்ப்பு, தங்கள் கையால் சனீஸ்வரருக்கு தீபாராதனை காட்டும் வாய்ப்பும் பக்தர்களுக்கு உள்ளது. புதிதாக வாகனம் வாங்குவோரும் இந்த கோவிலுக்கு வந்து சனீஸ்வரரை தரிசனம் செய்து, வாகனத்திற்கு பூஜை போட்டு செல்கின்றனர்.
கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் சீனி உருண்டை, புலாவ், தயிர் சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
- -நமது நிருபர் --