sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

சுற்றுலா

/

ஈஜிபுராவில் 108 அடி உயர மஹா விஷ்ணு சிலை ஜூன் 2ல் மஹா கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு

/

ஈஜிபுராவில் 108 அடி உயர மஹா விஷ்ணு சிலை ஜூன் 2ல் மஹா கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு

ஈஜிபுராவில் 108 அடி உயர மஹா விஷ்ணு சிலை ஜூன் 2ல் மஹா கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு

ஈஜிபுராவில் 108 அடி உயர மஹா விஷ்ணு சிலை ஜூன் 2ல் மஹா கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு

1


ADDED : மே 27, 2025 12:42 AM

Google News

ADDED : மே 27, 2025 12:42 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈஜிபுரா : தமிழகத்தில் இருந்து பெரிய பாறையில் 108 அடி உயர ஸ்ரீவிராட விஸ்வரூப மஹாவிஷ்ணுவின் திருவுருவ சிலை வடிக்கப்பட்டுள்ளது. ஈஜிபுரா கோதண்டராமசுவாமி கோவிலில் வரும் 2ம் தேதி கும்பாபிஷேகம் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.

பெங்களூரு ஈஜிபுராவில் 150 ஆண்டுகால பழமையான கோதண்டராமசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் உள்ள குரக்கோட்டையில் இருந்து, ஒரே கல்லினால் ஆன விஸ்வ ரூப மஹா விஷ்ணுவின் சிலை, 240 சக்கரங்கள் கொண்ட வாகனத்தில், ஈஜிபுரா கோதண்ட ராம சுவாமி கோவிலுக்கு எடுத்து வருவதற்கு பல மாதங்கள் ஆகின. இங்கு வந்த பின், அதை பீடத்தில் நிலை நிறுத்துவதற்கு ஒரு ஆண்டு ஆனது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடந்து வந்தன. 27 - 28 அடி அகலமுள்ள, 108 அடி உயரம் உள்ள ஸ்ரீவிராட விஸ்வரூப மஹாவிஷ்ணு திருவுருவ சிலை நிறுவும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இது வரை 18 கோடி ரூபாய் வரை செலவாகி உள்ளது. இதில் முக்கிய பங்காற்றியது கோவில் டிரஸ்டி டாக்டர் சதானந்தம். இந்த பணிக்கு பல ஆன்மிக அன்பர்கள் பொருளுதவி, பண உதவி செய்து உள்ளனர்.

ஜூன் 2ம் தேதி காலை 11:00 மணிக்கு கோவில் கும்பாபிஷேகத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து 45 நாட்கள் மண்டல பூஜைகளும் நடக்க உள்ளன.

கணபதி, கோஷ்ட தெய்வங்களுக்கு தனி சன்னிதிகள் தயாராகி வருகின்றன. பக்தர்கள் விசாலமாக சாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கான செலவுகள் அதிகமாகும் என்பதால் பக்தர்களிடம் நன்கொடை திரட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. பக்தர்கள் தங்கள் காணிக்கையை https://srivishwaroopa.com என்ற கோவில் இணைய தளத்திலும் சென்று செலுத்தலாம்.

இதுகுறித்து, மேலும் விபரங்களை அறிய ஸ்ரீகாந்த் - 98840 73394; ஸ்ரீ குமார் 99401 32369 ஆகியோரிடம் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us