உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலம் பெருமாள் கோவில்களில் விஷ்ணுபதி புண்ணிய கால பூஜை

சின்னசேலம் பெருமாள் கோவில்களில் விஷ்ணுபதி புண்ணிய கால பூஜை

சின்னசேலம்: சின்னசேலம் பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை நடந்தது.


சின்னசேலம் ஸ்ரீதேவி பூதேவி சமேத நித்ய கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ப க்தர்கள் பங்கேற்று தங்கள் வேண்டுதலுக்காக, கோவில் வளாகத்தை 27 முறை வலம் வந்து மலர்துாவி சுவாமியை வழிபட்டனர். பூஜைகளை பட்டாச்சாரியர் ஜெயக்குமார் செய்து வைத்தார். மகா தீபராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலிலும் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !