உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்பாளையம் கவைய காளியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

கோவில்பாளையம் கவைய காளியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

கோவில்பாளையம்: கோவில்பாளையம் கவைய காளியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.


கோவில்பாளையத்தில், பல நூறு ஆண்டுகள் பழமையான கவைய காளியம்மன் கோவிலில், புதிதாக தேர் அமைக்க, குலதெய்வ மக்கள் மற்றும் திருக்கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து பல லட்சம் ரூபாய் செலவில் தேர் உருவானது. புதிய தேரின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் ஹோமம் நடைபெற்றது. காலை 9:30 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் கோவில் பரிபாலன குழு தலைவரான, சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் தலைமை வகித்தார். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் முன்னிலை வகித்தார். கவைய காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, திருக்கோவில் நிர்வாகிகள், பரிபால உறுப்பினர்கள் மற்றும் குலதெய்வத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !