உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்ன வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் வலம்

அன்ன வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் வலம்

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில் அன்ன வாகனத்தில் பெருமாள் வலம் வந்தார்.


பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் 224 வது பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று இரவு அன்ன வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் இரட்டை குடைகள் கட்டி வீதி உலா வந்தார். நேற்று காலை ரெங்க மன்னார் அலங்காரத்திலும், இரவு சிம்ம வாகனத்தில் வீற்றிருந்தார். நாளை சேஷ வாகனத்திலும், 23ம் தேதி பெரிய திருவடியான கருட வாகனத்திலும் எழுந்தருள உள்ளார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !