தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் கொடியேற்றம்
சேத்துார்: தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை தவம் பெற்ற நாயகி, நச்சாடை தவிர்த்தருளிய சுவாமிக்கு அபிஷேகம் நடந்து கொடி மரத்திற்கு பூஜையுடன் பன்னீர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நிகழ்ச்சியை தொடர்ந்து கொடி மரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில் தவம் பெற்ற நாயகி, நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கற்பக தரு, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. இதில் ஆறாம் நாள் திருவிழாவான மே 26-ல் திருஞான சம்பந்தருக்கு திருமுலை பால் கொடுக்கும் நிகழச்சி மே 27-ல் திருக்கல்யாணம் 9-ம் திருவிழாவான மே28-ல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார், செயல் அலுவலர் முருகன் தலைமையில் ஊழியர்கள் செய்தனர்.