உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்தவாடி குரு கோவிலில் வரும் 26ல் குரு பெயர்ச்சி விழா

கோவிந்தவாடி குரு கோவிலில் வரும் 26ல் குரு பெயர்ச்சி விழா

காஞ்சிபுரம்: கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவிலில் வரும் 26ம் தேதி குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. குரு பகவான், மிதுன ராசியில் இருந்து, கடக ராசிக்கு வரும் 26ம் தேதி காலை 11:00 மணிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி, கோவிந்தவாடியில் உள்ள குரு பரிகார ஸ்தலமான அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்ததி சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழாவையொட்டி லட்சார்ச்சனை நடக்கிறது. இதில், சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹாதீப ஆராதனை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை ஹிந்து சமய அறநிலையத் துறையினர், அறங்காவலர் குழுவினர், கோவில் பணியாளர்கள், கோவிந்தவாடி கிராமத்தினர் இணைந்து செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !