காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோவிலில் தெப்பத் திருவிழா
ADDED :17 hours ago
காரைக்குடி: காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயிலில் நடந்த தெப்பத் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் செவ்வாய் திருவிழா, கடந்த மே 12 ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் வெள்ளிக்கேடயதில் அம்பாள் புறப்பாடும் பக்தி உலாவும் இரவு தீபாராதனை பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 19ம் தேதி நடந்தது. நேற்று தெப்பத்திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.