உக்கடம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் துவங்கியது
ADDED :109 days ago
கோவை; உக்கடம் கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் இனிதே துவங்கியது இதில் கோவில் கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஹோமங்கள் நடைபெற்றது இதில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இந்த நிகழ்வில் ஒரு உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிரம்மோற்சவம் நிகழ்ச்சிகள் தொடங்கியதை முன்னிட்டு தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.