சதுர்த்தி விழா; ரிஷப வாகனத்தில் உப்பூர் விநாயகர் வீதி உலா
ADDED :1 hours ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின் தொடர்ச்சியாக, ஆறாம் நாள் ஊர்வலமாக ரிஷப ( காளை ) வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக தீப ஆராதனை நடைபெற்றது. பின்னர் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்த விநாயகருக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.