ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் நவசண்டி யாகப் பெருவிழா
திருப்பூர்: திருப்பூர், அவிநாசிக்கவுண்டம்பாளையம், ஸ்ரீவிநாயகர், பட்டத்தரசி அம்மன், ஸ்ரீகருப்பராயர், ஸ்ரீமாகாளியம்மன் கோவில், 9வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நவசண்டி மஹா யாகபூஜை நடந்தது.
கடந்த 25ம் தேதி, மங்கள இசை, விநாயகர் வழிபாடுடன், நவசண்டி மஹாயாக பூஜைகள் துவங்கியது. கணபதி ேஹாமம் நடந்தது. தொடர்ந்து, மாத்ருகா பூஜை, மண்டபபலி, புஸ்தக பூஜை, வேதிகார்ச்சனைகள் நடந்தன. மாலை, 5:00 மணிக்கு, விநாயகர் வழிபாட்டுடன் நவாக்ஷரி ேஹாமம் நடந்தது. இரவு, 64 யோகிணி, 64 பைரவர் பலி பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு, விநாயகர் வழிபாட்டுடன், நவசண்டி மஹா யாகபூஜை துவங்கியது. 13 அத்யாய ேஹாம், காதம்பரி பலி, வடுகபலி, கோபூஜை, வசோத்தாரா ேஹாம பூஜைகள் விமரிசையாக நடந்தது.
நிறைவேள்வியை தொடர்ந்து, மூலாலய மூர்த்திகளுக்கு மகா அபிேஷகம், கலசாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், அலங்கார பூஜை, மஹா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.