உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவெற்றி விநாயகர் கோவில் ஆண்டு விழா

ஸ்ரீவெற்றி விநாயகர் கோவில் ஆண்டு விழா

அவிநாசி: திருமுருகன்பூண்டி வி.ஜி.வி., ஸ்ரீகார்டன் வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேக 3வது ஆண்டு விழா விமரிசையாக நடந்தது.

விழாவை முன்னிட்டு, கடந்த 23ம் தேதி திருமுருகநாத சுவாமி கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.

தொடர்ந்து மறு நாள் காலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமம், வெற்றி விநாயகர் மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !