வைகாசி விசாக தேர்த்திருவிழா கலை நிகழ்ச்சிகள்
திருப்பூர்: தேர்த்திருவிழாவில் நாளை (28 ம் தேதி),ஸ்ரீமாருதி மகிமை என்ற நாகை முகந்தனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது.
திருப்பூர் வைகாசி விசாக தேர்த்திருவிழாவில், தினமும் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. பெருமாள் கோவில் வளாகத்தில் மேடை அமைத்து, தினமும் மாலை 6:30 மணிக்கு, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன்படி வீரமணி ராஜூ குழுவினர், காயத்ரி ராமராஜ் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இன்று, சண்முகாலயா இசை நாட்டியப்பள்ளியின், ‘வைகாசியில் வைகுந்தனும் விசாகத்தில் விஸ்வேஸ்வரரும்’ என்ற இசை நடன நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை, ஸ்ரீமாருதி மகிமை என்ற தலைப்பில், நாகை முகந்தனின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.
வரும், 29ம் தேதி சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூடத்தின், ராம நாடக கலை நிகழ்ச்சி, 30ம் தேதி டிரீம் லேண்ட் டான்ஸ் ஸ்டுடியோவின், சிவார்ப்பணம் நாட்டிய மகோத்சவ நிகழ்ச்சி, 31ம் தேதி அன்பு நாட்டிய கலாேஷக்திராவின் பரத நாட்டிய நிகழ்ச்சி. வரும், ஜூன் 1ல் கவிநயா நாட்டியாலயாவின் பூர்ண மார்க்கம் நாட்டிய நடன நிகழ்ச்சி, 2ம் தேதி திருப்பூர் கம்பன் கழகத்தின், ‘கவிச்சக்கரவர்த்தி கம்பரின் ஸ்ரீசுந்தர காண்டம் இன்னிசை சொற்பொழிவு, சிறப்பு பட்டிமன்றம், 3ம் தேதி யாழிசை சங்கீதா கலாலயாவின் வீணை இசை மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.