உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி உற்சவம்

லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி உற்சவம்

கோவை: உக்கடம் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் நரசிம்மர் ஜெயந்தி விழா வரும் 29, 30ல் விமரிசையாக நடக்கிறது.

கோயிலில் எழுந்தருளியிருக்கும் மூலவர் லட்சுமி நரசிம்மசுவாமி மற்றும் உற்சவர் லட்சுமிநாராயண சுவாமிக்கு வரும் 29 காலை 6 மணிக்கு நவகலச ஸ்தபன மஹா திருமஞ்சனம் நடக்கிறது. 7 மணிக்கு லட்சுமி நரசிம்ம ஹோமம் நடக்கிறது.

காலை 7:30 மணிக்கு ரிக், யஜூர், சாம வேத பாராயணங்களை வேதவிற்பன்னர்களும், பட்டாச்சாரியர்களும் செய்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !