உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  மருதமலை முருகன் கோயில் அருகே கரடி நடமாட்டம்

 மருதமலை முருகன் கோயில் அருகே கரடி நடமாட்டம்

 வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கரடி வந்ததால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

முருகனின் ஏழாம் படைவீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. கோவில், அடர் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், கோவிலுக்கு செல்லும் வழியில் அவ்வப்போது காட்டு யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் தென்பட்டு வருகின்றன.

நேற்று காலை ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். காலை 8:30 மணிக்கு, வனப்பகுதியில் இருந்து, கரடி ஒன்று கோவில் தேர்நிலை அருகே உள்ள மலையின் சாய்வான பகுதியில் உணவு தேடி வந்துள்ளது. அங்கிருந்த தேன்கூட்டை கலைத்து, தேனை ருசித்து உண்டு கொண்டிருந்த கரடியை கண்ட பக்தர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வருவதற்குள், மக்கள் கூட்டமாக நிற்பதை கண்ட கரடி, மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடியது. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !