உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடையில் 17 ஆம் நூற்றாண்டு நடுகல்; மக்கள் மரியாதை

காரமடையில் 17 ஆம் நூற்றாண்டு நடுகல்; மக்கள் மரியாதை

காரமடை ; கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சிக்காரம்பாளையம் கிராமம் கருப்பராயன் நகர் பகுதியில் பழமையான நடுக்கல் கண்டெடுப்பு, மேடை கட்டி வழிபாடு செய்து வரும் அப்பகுதி மக்கள்.

17 ஆம் நூற்றாண்டின் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மனைவியுடன் கொங்கு நாட்டில் ஏராளமான கோவில்களுக்கும் சுற்று பயணம் செய்திருந்தார் வரலாற்றுச் சான்றிதழ் கூறுகிறது. முக்கிய பகுதியாகிய காரமடை அரங்கநாத சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்ததாக சான்றுகளும் உள்ளது. அவர் மனைவியுடன் இருப்பது போன்ற கற் சிற்பம் பல இடங்களில் உள்ளன. இதுபோல்

காரமடை அருகே உள்ள சிக்காரம் பாளையம் கருப்பராயன் நகர் பள்ளத்தின் அருகே, கண்டெடுக்கப்பட்ட தம்பதியாக நிற்கும் கற்சிலையை அப்பகுதி மக்கள் மேடை அமைத்து வழிபாடு மற்றும் மரியாதை செய்து வருகின்றனர். இதுகுறித்து தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஜெகதீசன் என்பவரிடம் கேட்டபோது இதற்கு நடுக்கல் என்று பெயர் 17-ம் நூற்றாண்டை சேர்ந்தது. திருமலை நாயக்கர் மதுரையை அரசாண்ட காலத்தில் அவர் குடும்பத்துடன் கொங்கு நாட்டுப் பகுதிகளில் சுற்றுப்பனம் மேற்கொண்டுள்ளார். அந்தக் காலகட்டத்தில் இப்படிப்பட்ட கற்சிலை வடிவம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த காலகட்டத்தில் போர் வீரர்கள் போரில் வீர மரணம் அடைந்தாலோ இயற்கை மரணம் அடைந்தாலும் அக்காலத்தில் மனைவி உடன் கட்டை ஏறுதல் வழக்கமும் இருந்திருக்கிறது. போர் வீரன் இறந்தால் மனைவியுடன் கல்லில் செதுக்கி குடும்பத்தினர் வழிபாடு செய்வர். இதை நடுகல் என கூறி வருகின்றனர். இந்த வகைகளை சார்ந்த நடுக்கல் தான் இது என்றார். வரலாற்று சான்றுகளை மக்கள் மறவாமல் வழிபாடு செய்தும் மரியாதை செலுத்தியும் பாதுகாத்து வரும் மக்களுக்கு பாராட்டுக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !