வீமக்கவுண்டர்பாளையம்: பாஞ்சாலியம்மன் கோவிலில் தேரோட்டம்
ADDED :2 hours ago
புதுச்சேரி: வீமக்கவுண்டர்பாளையம் தருமராசா பாஞ்சாலியம்மன் கோவிலில் திருவிழ கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று இரவு, பெருமாள் கருட வாகனத்திலும், பாஞ்சாலிம்மன், அர்ஜூனர் திருமண கோலத்துடன் பூப்பல்லக்கில் வீதியுலா நடந்தது. இன்று இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா, தபசு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம், அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 6ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 7ம் தேதி தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது.