அரசூர் மாசாணியம்மன் கோயில் பூக்குழி விழா
ADDED :1 days ago
திருவாடானை: திருவாடானை அருகே அரசூர் கிராமத்தில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோயில் திருவிழா ஜூன் 14ல் காப்புகட்டுதலுடன் நடந்தது. ஜூன் 26ல் திருவிளக்குபூஜை நடந்தது. சிறப்பு அபிேஷகம், தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் முடி இறக்கியும், மாவிளக்கு வைத்தும், காவடி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர். நேற்று (ஜூன் 28) காலை பூக்குழி இறங்கும் விழா நடந்தது. அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சி நடந்தது.