அகஸ்தியர் ஆயுர்வேத ஆசிரமத்தில் மரகதலிங்கத்திற்கு மஹா சண்டியாகம்
ADDED :11 hours ago
பொங்கலூர்: பொங்கலூர் அலகு மலை ஸ்ரீ அகஸ்தியர் ஆயுர்வேத ஆசிரமத்தில் மரகதலிங்கத்திற்கு ஸ்ரீ மஹா சண்டியாகத் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் விநாயகர் வழிபாடு, எஜமானர் சங்கல்பம், பூர் வாங்க பூஜை, மண்டபார்ச்சனை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், யாக வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. நேற்று நவாவரண பூஜை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், துர்கா சப்தசதியாகம், 13 அத்தியாய ஹோமம், பிரம்ஹாசாரி பூஜை, வடுகபூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை நடந்தது. மாலை மகா தீபாராதனை, பௌர்ணமி சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடந்தது. மகா சண்டியாக திருவிழாவை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அர்ச்சகர் பாபு சிவாச்சாரியார், ராஜகணபதி சிவம் உள்ளிட்டோர் நடத்தி வைத்தனர்.