உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம்

விருத்தாசலம் சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம்

விருத்தாசலம்: விருத்தாசலம் சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியன் கோவில் கும்பாபி ஷேகம் முன்னிட்டு நேற்று முன்தி னம் காலை விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது.

நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, கோ பூஜை, நாடி சந்தனம், பூர்ணாஹூதி நடந்தது. அதைத் தொடர்ந்து, கடம் புறப்பாடு முடிந்து வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (30ம் தேதி) முதல் மண்டல பூஜை துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !