உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கடஹர சதுர்த்தி விரதம்: விநாயகரை வழிபட தடைகள் விலகி வெற்றி கிடைக்கும்!

சங்கடஹர சதுர்த்தி விரதம்: விநாயகரை வழிபட தடைகள் விலகி வெற்றி கிடைக்கும்!

பவுர்ணமிக்கு அடுத்து வரும் தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி விரதமாகும். துன்பங்களையும் வேரோடு அழித்து நன்மைகளை அருளும் விரதம் இது.


சங்கடம்" என்றால் துன்பம், "ஹர" என்றால் அழிப்பது என்று பொருள். நம் வாழ்வில் வரும் சங்கடங்களை நீக்கும் சதுர்த்தி என்பதால் இது சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் தேய்பிறை சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். இதில் ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தி என மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் நீராடி, விநாயகரை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். அன்றைய நாள் முழுவதும் தங்களால் இயன்றவரை உணவைத் தவிர்த்து (அல்லது பால், பழங்கள் மட்டும் உட்கொண்டு) விரதம் இருப்பது வழக்கம்.  மாலை நேர வழிபாடு: மாலை நேரத்தில் சந்திரன் உதயமாவதற்கு முன்னால் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்வார்கள். அருகம்புல் மற்றும் கொழுக்கட்டை: விநாயகருக்குப் பிரியமான அருகம்புல் மாலை சாற்றி, கொழுக்கட்டை அல்லது சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். மாலையில் சந்திரன் உதித்த பிறகு, சந்திரனைத் தரிசித்து, விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு பிரசாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இன்று விநாயகரை வழிபட கடன் தொல்லை தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !