சுகப்பிரம்ம மகரிஷி அருட்பீடத்தில் ஜெயந்தி விழா
ADDED :10 hours ago
கடலுார்: பில்லாலி தொட்டி சுகப்பிரம்ம மகரிஷி அருட்பீடத்தில் சிறப்பு ேஹாமம் நடந்தது.
கடலுார், திருவந்திபுரம் அடுத்த பில்லாலி தொட்டி சுகப்பிரம்ம மகரிஷி அருட்பீடத்தில் ஆனி மாத ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று காலை சங்கல்பம், ஹோமம், சங்கு பூஜை நடந்தது.
தொடர்ந்து, சுகப்பிரம்ம மகரிஷி மற்றும் மார்க்கண்டேயருக்கு சங்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை சபரி குருக்கள் செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சம்பத்குமார் செய்திருந்தார்.