உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள்.. பக்தர்கள் புகார் அளிக்கலாம்; அமைச்சர் ரமேஷ்

கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள்.. பக்தர்கள் புகார் அளிக்கலாம்; அமைச்சர் ரமேஷ்

கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் வேலை வாங்கித்தருவதாக லஞ்சம் பெறுபவர்கள் ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் குறிபிட்டுள்ளதாவது; தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.  இ-மெயில் முகவரி  minister_hrce@tn.gov.in. நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகை செய்யப்படும் இவ்வாறு அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !