உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி சிறப்பு பூஜை
ADDED :1 days ago
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.
உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விநாயகருக்கு பால், தயிர், பன்னீர் போன்ற 16 வகையான பொருட்களால் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.