உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜை

கோவை பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜை

கோவை; சுங்கம் பைபாஸ் ரோடு நடராஜ் சிவராம் அபிராமி நகர் ஸ்ரீ பிரசன்ன விநாயகர் கோவிலில் 31-ம் ஆண்டு கும்பாபிஷேக நாள் விழா கொண்டாடப்பட்டது இதன் முதல் நிகழ்வாக காலை கணபதி ஹோமம் நடைபெற்றது தொடர்ந்து மூலவர் விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது. இதில் மூலவர் பிரசன்ன விநாயகர் வெள்ளிகாப்பு கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !