உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவிலில் சம்ப்ரோஷண ஹோமங்கள், பூர்ணாகுதி

உலகளந்த பெருமாள் கோவிலில் சம்ப்ரோஷண ஹோமங்கள், பூர்ணாகுதி

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பிரதான ஹோமங்கள் நடந்தது.


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் 5ம் தேதி மகா சம்ப்ரோஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த 30ம் தேதி முதல் ஹோமங்கள் துவங்கி நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 7:00 மணிக்கு யாகசாலை மண்டபத்தில் புண்யாகவாசனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆவாகனம், மகா சாந்தி ஹோமம், பிரதான ஹோமங்கள், பூர்ணாகுதி, சாற்றுமடை நடந்தது. மாலை 5:30 மணிக்கு ஷீராதிவாச ஹோமம், ஸ்னபனம், பூர்ணாகுதி நடந்தது. நாளை காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் விமானங்கள், ராஜகோபுரங்கள், மூலஸ்தானங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா சம்ப்ரோச்சனம் நடக்கிறது. ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் ஏஜென்ட் கோலாகலன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !