பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் நாளை கும்பாபிஷேக நாள் பூஜை
ADDED :9 hours ago
புதுச்சேரி: புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் நாளை 5ம் தேதி கும்பாபிஷேக நாள் சிறப்பு பூஜை நடக்கிறது.
அதனையொட்டி, நாளை காலை 7:30 மணிக்கு கோவிலில் உள்ள சம்பூர்ண யாக சாலையில் கடம் பிரதிஷ்டை செய்து, சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது. காலை 8.௦௦ மணிக்கு, கோவிலில் அமைந்துள்ள வலம்புரி மகா கணபதி, சீதா சமேத பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி மற்றும் 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. காலை 10 மணிக்கு பூர்ணாஹூதியை தொடர்ந்து, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து அனைத்து சன்னதிகளிலும் கடப்ரோக் ஷணமும், பகல் 12 மணிக்கு அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது.