உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் திருக்காலிமேடு திருவாத்தி அம்மன் ஊஞ்சல் சேவை

காஞ்சிபுரம் திருக்காலிமேடு திருவாத்தி அம்மன் ஊஞ்சல் சேவை

  காஞ்சிபுரம்: ஆடி திருவிழாவையொட்டி, காஞ்சிபுரம் திருக்காலிமேடு திருவாத்தி அம்மன் நேற்று ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் திருக்காலிமேடு திருவாத்தி அம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி கடந்த 5ம் தேதி காப்பு கட்டும் நிகழ்வு நடந்தது. இதில், நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹாதீப ஆராதனை நடந்தது.

காலை 7:00 மணிக்கு ஜலம் திரட்டலும், மதியம் 2:00 மணிக்கு கூழ்வார்த்தலும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு உத்சவர் அம்மன், ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !