அன்ன வாகனத்தில் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் வீதி உலா
ADDED :8 hours ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவத்தில் பெருமாள் அன்ன வாகனத்தில் உலா வந்தார். கோயிலில் பிரம்மோற்ஸவம் கொடியேற்றுடன் துவங்கி நடக்கிறது. நேற்று இரவு அன்ன வாகனத்தில் மோகினி அவதாரத்தில் அருள்பாலித்தார். இன்று சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். நாளை சேஷ வாகனத்திலும், 24ம் தேதி இரவு கருட வாகனத்திலும் உலா வர உள்ளார். ஜூலை 28 இரவு வைகை ஆற்றில் குதிரை வாகனத்தில் அருள்பாலிக்க உள்ளார்.