உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஷாட நவராத்திரி; வனதேவதை அலங்காரத்தில் அருள்பாலித்த வராகி அம்மன்

ஆஷாட நவராத்திரி; வனதேவதை அலங்காரத்தில் அருள்பாலித்த வராகி அம்மன்

பரமக்குடி; பரமக்குடி சத்தேழு கன்னிமார் கோயிலில் அருள் பாலிக்கும் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது. ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 15 துவங்கி நடக்கிறது. இக்கோயிலில் தனி சன்னதியாக அருள்பாலிக்கும் சொர்ண வராகி அம்மனுக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. இதன்படி நேற்று இரவு வராகி வனதேவதை அம்மனாக அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !