மும்மூர்த்தி ஆண்டவர் வாராஹி அம்மன் கோவிலில், ஆஷாட நவராத்திரி விழா
ADDED :7 hours ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில், மும்மூர்த்தி ஆண்டவர் வாராஹி அம்மன் கோவிலில், ஆஷாட நவராத்திரி விழா கடந்த, 14ம் தேதி துவங்கி நடக்கிறது. தினமும், ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும், கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியகால வாசனம், ஸ்ரீ வாராஹி அம்மன், பஞ்சலோக விக்ரஹம் நயனோன் மீலனம் யாக வேள்வி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தங்க கவசத்தில் ராஜ அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். வாராஹி அம்மன் பஞ்சலோக விக்ரஹத்திரிக்கு மகா அபிேஷகம், வாராஹி அம்மன் திருக்கல்யாணஉற்சவம் நடைபெற்றது.
தீபாராதனை, மஞ்சள் நீராட்டம், பாலிகை விடுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.